×

நடிகர் விக்ரமிற்கு எதிராக களமிறங்கும் பிரபல பாலிவுட் இயக்குநர்!

விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய தமிழ் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் அனுராக் கஷ்யப். சென்னை: விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய தமிழ் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் அனுராக் கஷ்யப். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த சாமி 2 திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது .அதை தொடர்ந்து நடிகர் கமலின் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
 

விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய தமிழ் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் அனுராக் கஷ்யப்.

சென்னை: விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய தமிழ் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் அனுராக் கஷ்யப்.
  
தமிழ்  சினிமாவில் வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த சாமி 2 திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது .அதை தொடர்ந்து நடிகர் கமலின் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீஸுக்கு  தயாராகி வருகிறது.  

மேலும் மகாவீர் கர்ணா என்ற படத்திலும்  நடித்தும் வருகிறார். ஏற்கனவே  நின்றுபோன கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தை  இயக்கிய அஜய் ஞானமுத்துவின்  புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். விரைவில் தொடங்கப்படவுள்ள இப்படத்தில் வில்லனாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே இமைக்கா  நொடிகள்  திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.