×

நடிகர் ராதாரவிக்காகவே மீண்டும் சீதை வேடத்தில் நடிக்கும் நயன்தாரா…3டியில் 1500கோடியில் ராமாயணம்…

நயன்தாரா சீதையாக நடித்தது குறித்து ராதாரவி மட்டமான கமெண்ட் அடித்தது இங்கே நினைவுகூரத்தக்கது. இதுவரை இந்திய சினிமா கண்டிராத மாபெரும் பட்ஜெட்டில், 3டியில் உருவாகவிருக்கும் ’ராமாயணம்’படத்தில் மீண்டுமொருமுறை சீதாவாக நடிக்கவிருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்தப்படத்திற்கு அவருக்கு பத்துப் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை மொத்தமாக வழங்க தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே பல மொழிகளில் பல வடிவங்களில் எடுக்கப்பட்ட ’ராமாயணம்’ ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர்.
 

நயன்தாரா சீதையாக நடித்தது குறித்து ராதாரவி மட்டமான கமெண்ட் அடித்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

இதுவரை இந்திய சினிமா கண்டிராத மாபெரும் பட்ஜெட்டில், 3டியில் உருவாகவிருக்கும் ’ராமாயணம்’படத்தில் மீண்டுமொருமுறை சீதாவாக நடிக்கவிருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்தப்படத்திற்கு அவருக்கு பத்துப் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை மொத்தமாக வழங்க தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே பல மொழிகளில் பல வடிவங்களில் எடுக்கப்பட்ட ’ராமாயணம்’ ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். இந்தி நடிகைகள் பலரை பரிசீலித்த பின்னர் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

ராமாயணத்தை படமாக்குவது குறித்து டைரக்டர்கள் நிதிஷ் திவாரி, ரவி உத்யவார் ஆகியோர்,“ராமாயணம் மிக சிறந்த காவியம் மட்டுமின்றி நமது கலாசாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த படத்தை மிகவும் பொறுப்போடு எடுக்கும் அவசியம் இருக்கிறது. பண விஷயத்தில் சமரசம் வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சுதந்திரம் கொடுத்துள்ளனர். எனவே இந்த படத்தை கண்கொள்ளாக் காட்சியாக திரையில் காட்ட இருக்கி றோம்.” என்கிறார்கள்.இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. முதல் பாகம் 2021-ல் வெளியாகிறது.

‘கொலையுதிர்காலம்’பட ஆடியோ விழாவில் நயன்தாரா சீதையாக நடித்தது குறித்து ராதாரவி மட்டமான கமெண்ட் அடித்தது இங்கே நினைவுகூரத்தக்கது.