×

நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்!

பல படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். நடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது மறைவுக்கு திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னதிரையில் தொகுப்பாளராகவும் , மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் டான்சராகவும் வலம்வந்தவர் நடிகர் மனோ. இவர் சின்னதிரை மட்டுமல்லாது வெள்ளித்திரையில் வெளியான “புழல் ” திரைப்படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார்.மேலும் பல படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர்
 

பல படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில்  நடித்து வந்த இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். 

நடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது மறைவுக்கு திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சின்னதிரையில்  தொகுப்பாளராகவும் , மானாட மயிலாட  நிகழ்ச்சியின் மூலம் டான்சராகவும் வலம்வந்தவர் நடிகர் மனோ. இவர் சின்னதிரை மட்டுமல்லாது வெள்ளித்திரையில் வெளியான  “புழல் ” திரைப்படத்தில் மூன்று ஹீரோக்களில்  ஒருவராக  நடித்திருந்தார்.மேலும்  பல படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில்  நடித்து வந்த இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். 

இந்நிலையில் தீபாவளி நாளான கடந்த 27 ஆம் தேதி மனைவி  லிவியாவுடன் அம்பத்தூரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சென்டர் மீடியனில்  மோதி விபத்துக்குள்ளது. இதில் நடிகர்  மனோ சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவருடைய மனைவி  லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மனோவின் மறைவுக்குத் திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறந்த நடிகர் மனோவுக்கு  7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.