×

நடிகர் சங்கத்துக்கு புது அரசு அதிகாரி நியமித்ததை எதிர்த்து நடிகர் விஷால் மனுதாக்கல்!

இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் கோரி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு விசாரணை கடந்த மாதம் சென்னை
 

 இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இதனிடையே தேர்தலை  ரத்து செய்யக் கோரி  குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு விசாரணை கடந்த மாதம்   சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து  இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. 

இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் இன்று  சிறப்பு அதிகாரியின்  நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி  தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில் மூன்று நான்கு பேர்கள் சொல்லும் புகாரை ஏற்று தனி அதிகாரியை நியமித்துள்ளது சட்ட விரோதமானது. எனவே அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்  என்று வாதம் முன்வைக்கப்பட்டது. 

அப்போது நடிகர் சங்க வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி கல்யாண சுந்தரம் முன், பட்டியலிடும்படி பொறுப்பு தலைமை அதிகாரியிடம் அனுமதி வாங்க  நீதிபதி பி.டி.ஆதிகேசவலு  அறிவுரை வழங்கினார். இதையடுத்து நடிகர் சங்கத்தின் வழக்குக்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக  விசாரிக்க கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.