×

தொடரும் சிக்கல்: அமலா பாலின் ஆடை படம் இன்று வெளியாகவில்லை! 

அமலா பாலின் ஆடை படம் இன்று வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னை: அமலா பாலின் ஆடை படம் இன்று வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேயாத மான் பட புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்திருக்கும் படம் ‘ஆடை’. வி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்தது வெளியாகிப் பல விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களில் பெரும்
 

அமலா பாலின் ஆடை படம் இன்று வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 சென்னை: அமலா பாலின் ஆடை படம் இன்று வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

மேயாத மான் பட புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்திருக்கும் படம் ‘ஆடை’. வி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசரில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்தது வெளியாகிப் பல விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்டுருந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் தயாரிப்பாளருக்குப் பண விவகாரம் தொடர்பான பிரச்சினை உள்ளதால் திரைங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை. இதனால் இன்று படம் வெளியாகவில்லை. இதனால் முன் பதிவு செய்திருந்த அமலா பால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.