×

தேர்தல் முடியும்வரை பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தடை!

இந்த படத்தின் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு அரசியல் ஆதாயம் உள்ளதா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்கட்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என உத்தரவிடப்பட்டது. ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாவது அக்கட்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்
 

இந்த படத்தின் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு அரசியல் ஆதாயம் உள்ளதா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்கட்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என உத்தரவிடப்பட்டது.

ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாவது அக்கட்சிக்கு வலு சேர்க்கும் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது, மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே அதிகமான நேரத்தை செலவழித்து விட்டது. இன்னும் இந்த திரைப்படத்துக்கு தரச் சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை.

இந்த படத்தின் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு அரசியல் ஆதாயம் உள்ளதா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்கட்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று எதிர்கட்சியின் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு தடைவிதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளியாவது சரியாக இருக்காது, எனவே தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக Modi: Journey of a Common Man எனும் வெப் சீரிஸ் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்