×

தெலுங்கில் ரீமேக் ஆகிறது விஜயின் தெறி!

தளபதி விஜய் நடித்த தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை: தளபதி விஜய் நடித்த தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இத்திரைப்படம் ரீசிகர்களின் வரவேற்பு மட்டுமின்றி வசூல் மழையும் பொழிந்தது. இந்நிலையில்
 

தளபதி விஜய் நடித்த தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: தளபதி விஜய் நடித்த தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இத்திரைப்படம் ரீசிகர்களின் வரவேற்பு மட்டுமின்றி வசூல் மழையும் பொழிந்தது.

இந்நிலையில் தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது வரும் நிலையில் அதை சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் என்பவர் இயக்கவுள்ளார்.

இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜாவும்,எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசாவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.மேலும் சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த பிறகு ஏப்ரல் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.