×

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தலுக்கான வாய்ப்பு உள்ளது ஐசரி கணேஷ் பரபரப்பு பேட்டி !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி கணேஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி கணேஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பட்டு துறை மையமும் இணைந்து ஏற்பாடு செய்த சங்கரதாஸ்
 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி கணேஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி கணேஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பட்டு துறை மையமும் இணைந்து ஏற்பாடு செய்த சங்கரதாஸ் சுவாமிகள் 97-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐசரி கணேஷ், நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளதாகவும், தனி அதிகாரி நியமனத்தில் தனது அழுத்தம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புவதாக குறிப்பிட்ட ஐசரி கணேஷ் “என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து திட்டமிட்டபடி நவம்பர் 29-ந்தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை  நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம், சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஆகியோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது