×

திலீப்-காவ்யா மாதவன் பொண்ணு பெயர் தெரியுமா?

மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொச்சி: மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையாள நடிகர் திலீப் தனது முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், தசரா பண்டிகையையொட்டி கடந்த அக்.19ம் தேதி
 

மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொச்சி: மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகர் திலீப் தனது முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், தசரா பண்டிகையையொட்டி கடந்த அக்.19ம் தேதி கொச்சியில் நடிகை காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே திலீப்-மஞ்சு வாரியர் தம்பதிக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

இதையடுத்து, குட்டி காவ்யா மாதவனின் புகைப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பெயர் சூட்டும் விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திலீப்பின் மூத்த மகளான மீனாட்சி தனது தங்கைக்கு மஹாலட்சுமி என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. திலீப் மகளின் பெயர் சூட்டு விழாவில் புகைப்படங்கள் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவெடுத்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.