×

திரைத்துறையினர் போஸ்ட் வேலைகளை தொடங்கலாம் – தமிழக அரசு 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து வரும் 11 ஆம் தேதி முதல் படத்தொகுப்பு, குரல் பதிவு, கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ், டிஐ எனப்படும் நிறகிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளுக்கு மட்டும் அதிகபட்சம் 5
 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதால்,  இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தய போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இதையடுத்து வரும் 11 ஆம் தேதி முதல் படத்தொகுப்பு, குரல் பதிவு, கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ், டிஐ எனப்படும் நிறகிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளுக்கு மட்டும் அதிகபட்சம் 5 பேருடன் பணியாற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேற்கண்ட பணிகளில் ஈடுபடுவோர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்று தந்து அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி பணி செய்வதை உறுதி செய்யுமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.