×

திருமணமாகி விட்டதா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்து பேசிய நடிகை சுனைனா

சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்ப்பறவை, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சுனைனா. இவர் தற்போது இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘சில்லுகருப்பட்டி’ படத்தில் சமுத்திரகனி, சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை சுனைனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்
 

சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்ப்பறவை, தெறி  உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்  நடிகை சுனைனா.

இவர் தற்போது இயக்குநர் ஹலிதா ஷமீமின்   ‘சில்லுகருப்பட்டி’ படத்தில் சமுத்திரகனி, சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் நடிகை சுனைனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது  ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என இணையத்தில் செய்தி வெளியாகி வருகிறதே? என்று கேட்டார்.

அதற்கு சுனைனா, ‘எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் ஆகிவிட்டதாக வரும் செய்திகள் வெறும் வதந்தியே. எனது திருமணம் முறையான அறிவிப்பு உடனே நடக்கும்.  அதனால் ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று விளக்கமளித்துள்ளார்.