×

திருப்பதியில் நடிகர் தனுஷின் அக்கா மகளுக்கு மொட்டை : வைரல் போட்டோஸ்!

தனுஷ் எப்போதுமே குடும்பத்துடன் மிகவும் பாசமாகவும், நெருக்கமாகவும் இருப்பாராம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவருக்கு அண்ணன் செல்வராகவன் தவிர்த்து 2 சகோதரிகள் உள்ளனர். தனுஷ் எப்போதுமே குடும்பத்துடன் மிகவும் பாசமாகவும், நெருக்கமாகவும் இருப்பாராம். அதுவும் அவரின் சகோதரிகளுடன் கூடுதல் அன்பாக நடந்துகொள்வாராம். படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் நிச்சயம் வீட்டில் குடும்பத்துடன் ஆஜராகி பொழுதை கழிப்பதை வழக்கமாக வைத்திருப்பாராம் தனுஷ். தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட
 

தனுஷ் எப்போதுமே குடும்பத்துடன் மிகவும் பாசமாகவும், நெருக்கமாகவும் இருப்பாராம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநர்  கஸ்தூரி ராஜாவின் மகனான இவருக்கு அண்ணன் செல்வராகவன் தவிர்த்து 2 சகோதரிகள் உள்ளனர்.  தனுஷ் எப்போதுமே குடும்பத்துடன் மிகவும் பாசமாகவும், நெருக்கமாகவும் இருப்பாராம். அதுவும் அவரின் சகோதரிகளுடன் கூடுதல் அன்பாக நடந்துகொள்வாராம். 

படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் நிச்சயம் வீட்டில் குடும்பத்துடன் ஆஜராகி பொழுதை கழிப்பதை வழக்கமாக வைத்திருப்பாராம் தனுஷ். தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள அவர், பாலிவுட் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் தனுஷ் திருப்பதிக்கு என்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.  அதற்கான காரணம்  தற்போது தெரியவந்துள்ளது. அதாவது தனுஷின் சகோதரியின் மகளுக்கு  மொட்டை அடிக்க திருப்பதி சென்றுள்ளனர்.

அப்போது தாய் மாமனான தனுஷின் மடியில் அமர வைத்து மொட்டையடித்துள்ளனர். அப்போது தனுஷின் குடும்ப வழக்கப்படி, தனுஷ் தான் முதல் முடியை எடுத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.