×

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்

அதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷ் பாலிவுட் படமான அந்தராங்கி ரே படப்பிடிப்பில் உள்ளார். இப்படம் முடிந்தவுடன் அவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்
 

அதை தொடர்ந்து இயக்குநர்  மாரி  செல்வராஜ் இயக்கத்தில்  கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். 

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம்  படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து இயக்குநர்  மாரி  செல்வராஜ் இயக்கத்தில்  கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். 

 

தற்போது நடிகர் தனுஷ் பாலிவுட் படமான அந்தராங்கி ரே படப்பிடிப்பில் உள்ளார். இப்படம் முடிந்தவுடன் அவர்  இயக்குநர் செல்வராகவன்  இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று  தனது  மனைவி மற்றும் அண்ணன்  செல்வராகவனுடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். நடிகர் தனுஷ் மற்றும் அவரின் குடும்பத்தைத் தேவஸ்தான நிர்வாகிகள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.  தனுஷின் வருகையறிந்த பொதுமக்கள் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொண்டனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.