×

திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்ட சமந்தா 

நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாகசென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சென்னை: நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாகசென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் தீவிரமாகக் கணவரின் மதத்தையும் பின் பற்றி வரும் சமந்தா அடிக்கடி திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொள்வார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’
 

நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாகசென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

சென்னை: நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாகசென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் தீவிரமாகக் கணவரின் மதத்தையும்  பின் பற்றி வரும் சமந்தா அடிக்கடி திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொள்வார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் நல்ல விமர்சனம் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து திருமணத்துக்குப் பின் தெலுங்கில் கணவர் நாகசைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘மஜிலி’ திரைப்படம் வரும் ஏப்.5ம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் நடிகை சமந்தா சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கவும், மஜிலி திரைப்படம் வெற்றிபெற வேண்டியும் கீழிருந்து மேல் திருப்பதி வரை சுமார் 3550 படிக்கட்டுகள் பாதயாத்திரையாகச் சென்று ஏழுமையானை வழிபாடு செய்துள்ளார்.

இதற்கு முன்பாக திருமணம் நிச்சயம் ஆனவுடன் ஒரு முறை சமந்தா திருப்பதிக்குப் பாதயாத்திரையாகச் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நடிகர் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்தவர் மகேந்திரன்; நடிகர் ரஜினி உருக்கம்!