×

திருத்தம் செய்யாததால் பின்னணி இசையை நீக்கிய இயக்குநர்… அதிர்ச்சியில் இளையராஜா ரசிகர்கள்!

விவசாயி படத்தில் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை அமைக்க காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் முற்றிலுமாக நீக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசைக் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் காக்கா மட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டனின் விவசாயி படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டார். விவசாயி படத்தில் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை அமைக்க காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் முற்றிலுமாக நீக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

விவசாயி படத்தில் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை அமைக்க காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் முற்றிலுமாக நீக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைக் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் காக்கா மட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டனின் விவசாயி படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டார்.

விவசாயி படத்தில் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை அமைக்க காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் முற்றிலுமாக நீக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசைக் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் காக்கா மட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டனின் விவசாயி படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். நல்லாண்டி என்ற பெரியவர்தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வந்தது. படத்துக்கு இளையராஜா பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். இதில் இயக்குநர் மணிகண்டனுக்கு திருப்தி இல்லை. இதனால், சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இயக்குநர் மணிகண்டன் இளையராஜாவின் பின்னணி இசை முழுவதையும் நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை வைத்து பின்னணி இசை சேர்ப்பு வேலைகளை நடத்தி வருகிறாராம்.

இளையராஜா மிகவும் கோபக்காரர், அவரிடம் திருத்தம் செய்து வாங்குவது எல்லாம் நடக்காத காரியம் என்று பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வருகின்றன. அப்படி இருக்கும்போது, இளையராஜாவிடம் பிரச்னை செய்து, அவரது பின்னணி இசையை நீக்கியிருப்பது இளையராஜா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இளையராஜாவின் திரை வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.