×

திடீரென அப்டேட் விட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனி கபூர்! 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டியன்று விஸ்வாசம் எனும் மெஹா ஹிட் படத்தைக் அஜித் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அடுத்த ஏழு மாதத்தில் தனது 59வது படமான நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா
 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டியன்று விஸ்வாசம் எனும் மெஹா ஹிட் படத்தைக் அஜித் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அடுத்த ஏழு மாதத்தில் தனது 59வது படமான நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.  

இதில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பதாகத் தான் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.