×

தி லயன் கிங் படத்திற்கு பின்னணிக் குரல் கொடுத்த பாலிவுட் கிங்! 

தி லயன் கிங்’ ஹிந்தி பதிப்பிற்கு பாலிவுட்டின் டாப் ஹீரோ பின்னணிக் குரல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை: ‘தி லயன் கிங்’ ஹிந்தி பதிப்பிற்கு பாலிவுட்டின் டாப் ஹீரோ பின்னணிக் குரல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 1994ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘தி லயன் கிங்’, படம் தற்போது மீண்டும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகிறது. 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜங்கிள் புக்’ போல, தத்ரூபமான கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என
 

தி லயன் கிங்’ ஹிந்தி பதிப்பிற்கு பாலிவுட்டின் டாப்  ஹீரோ பின்னணிக் குரல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: ‘தி லயன் கிங்’ ஹிந்தி பதிப்பிற்கு பாலிவுட்டின் டாப்  ஹீரோ பின்னணிக் குரல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த 1994ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘தி லயன் கிங்’, படம் தற்போது மீண்டும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகிறது. 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜங்கிள் புக்’ போல, தத்ரூபமான கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது.  பெருப்பாலும் ஒரு அனிமேஷன் படம் வெளியாகிறது என்றால் அந்த மொழியில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பார்கள். உதாரணத்திற்கு ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்தை நம் மூர் மொழிகளில் டப்பிங் செய்யும் போது, இங்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துத்திருந்தார். 

இந்த நிலையில் லயன் கிங் ஹிந்தி பதிப்பிற்குக் குரல் கொடுக்க பாலிவுட்டின் கிங் ஷாரூக் கான் முன்வந்துள்ளார். அவர் மட்டுமின்றி அதில் வரும் சிம்பா கதாபாத்திரத்துக்குத் தனது மகன் ஆர்யனும் டப்பிங் குரல் கொடுக்க வைத்துள்ளார்.

மேலும் இந்த படம் வரும் ஜூலை 19ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.