×

தளபதி64 அப்டேட்: நீட் தேர்வை வச்சி செய்யும் விஜய்? 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமூக பிரச்னையை மையப்படுத்தி அவர் பேசுகிறார். கத்தி படத்தில் தண்ணீர், கார்ப்பரேட் பற்றி பேசினார். மெர்சல் படத்தில் மருத்துவ முறைகேடு பற்றி அவர் கூறியதைக் காட்டிலும் ஜி.எஸ்.டி பற்றி அவர் பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஒவ்வொரு
 
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமூக பிரச்னையை மையப்படுத்தி அவர் பேசுகிறார். கத்தி படத்தில் தண்ணீர், கார்ப்பரேட் பற்றி பேசினார். மெர்சல் படத்தில் மருத்துவ முறைகேடு பற்றி அவர் கூறியதைக் காட்டிலும் ஜி.எஸ்.டி பற்றி அவர் பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்க்கார் படத்தில் வாக்களித்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்கால அரசியலைத் தாக்கியிருந்தார். அந்த வகையில் தன்னுடைய அடுத்த படத்தில் கல்வித் துறையில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி குறிப்பாக நீட் தேர்வு பற்றி பேச உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தலைப்பு கூட நீட் தேர்வின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கூறியிருக்கிறாராம் விஜய். நீட் தேர்வு காரணமாக மருத்துவராகும் கனவு சிதைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது வீட்டுக்கே விஜய் சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.