×

தளபதி விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்: மீண்டும் தியேட்டரில் வெளியாகிறது விஜய்யின் இந்த சூப்பர் ஹிட் படங்கள்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ஹிட் படங்களைத் திரையிடவிருப்பதாகத் திரையரங்குகள் அறிவித்துள்ளன. சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ஹிட் படங்களைத் திரையிடவிருப்பதாகத் திரையரங்குகள் அறிவித்துள்ளன. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். படத்தில் தனது நடிப்பின் மூலம் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தைக் கவர்ந்து வைத்துள்ள இவர் மற்றொரு பக்கம் தனது அடக்கமான குணத்தின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்துள்ளார். பொதுவாக இவரின் படம்
 

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ஹிட் படங்களைத் திரையிடவிருப்பதாகத் திரையரங்குகள் அறிவித்துள்ளன.

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ஹிட் படங்களைத் திரையிடவிருப்பதாகத் திரையரங்குகள் அறிவித்துள்ளன.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். படத்தில் தனது நடிப்பின் மூலம் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தைக் கவர்ந்து வைத்துள்ள இவர் மற்றொரு பக்கம் தனது அடக்கமான குணத்தின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவைத்துள்ளார். 

பொதுவாக இவரின் படம் வெளியானாலே அதைத் திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். அப்படி இருக்கும் வகையில் அவர் பிறந்த நாள் எப்படி கொண்டாடுவார்கள் என்று சொல்லவா வேண்டும். இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையடுத்து அன்றைய நாளில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களைத் திரையிடவிருப்பதாகத் திரையரங்குகள் அறிவித்துள்ளன.

அதன்படி சென்னையில் உள்ள பிரபல வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜீன் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய்யின் ‘போக்கிரி’ திரையிடப்படவிருப்பதாக அறிவித்தார்.

அதே போன்று சென்னை ரோகினி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘கத்தி’ மற்றும் போக்கிரி படங்களை திரையிடவுள்ளதாக’ அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.