×

தளபதி 64படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே
 

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் . இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது.  அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில் தளபதி64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.