×

தளபதி 64 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தளபதி 64 படப்பிடிப்பில் பங்கேற்ற தனது ரசிகரின் பிறந்தநாளை நடிகர் விஜய் சேதுபதி கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு
 

தளபதி 64 படப்பிடிப்பில் பங்கேற்ற தனது ரசிகரின் பிறந்தநாளை நடிகர் விஜய் சேதுபதி கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை   இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் . இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது.  அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. 

 

 

இந்நிலையில் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதியின் கர்நாடக மாநில ரசிகர் ஒருவர் பிறந்தநாளை கொண்டாட விரும்பி உள்ளார். ரசிகரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் விதமாக  படப்பிடிப்பிற்கு இடையே அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் விஜய்சேதுபதி . அந்த கேக்கை அவரது ரசிகருக்கு விஜய்சேதுபதி ஊட்டிவிடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.