×

தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லன் இவர் தானா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிகில். தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிகில். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விஜய் அதில் பணியாற்றிய வர்களுக்குத் தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கினார். அதைத்தொடர்ந்து விஜயின் தளபதி 64 படம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி தளபதி ரசிகர்களைக்
 

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிகில்.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிகில். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விஜய் அதில் பணியாற்றிய வர்களுக்குத் தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கினார். 

அதைத்தொடர்ந்து விஜயின் தளபதி 64 படம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி தளபதி ரசிகர்களைக் குஷியாகியது. அதில் நடிக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படம் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் இதில் தளபதிக்கு வில்லனாக யார் நடிப்பார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை கேட்டு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.