‘தளபதி 64’ தயாரிப்பாளர் – விஜய் சந்திப்பு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
கருத்து வேறுபாட்டால் சேவியர் பிரிட்டோ தயாரிப்பு பணியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்பட்டது.
பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதனிடையே தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவுக்கு பதிலாக லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியது. கருத்து வேறுபாட்டால் சேவியர் பிரிட்டோ தயாரிப்பு பணியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யை சந்தித்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் விஜய் தளபதி 64 கெட்டப்பில் உள்ளார். இதன் மூலம் படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.