×

‘தளபதி 64’ அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது
 

த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை   இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது  படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் படப்பிடிப்பு முடித்து கொண்டு சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்தகட்டமாகக் கர்நாடகா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஒருமுக்கிய  சிறைச்சாலையில் ‘தளபதி 64’ படத்திற்கான  லொகேஷன் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் படக்குழு வரும் டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடகா செல்லும் என்று கோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவியுள்ளது. 

முன்னதாக  தளபதி 64 படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரும், டைட்டிலும் வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இணையத்தில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.