×

தளபதி 63 படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

நடிகர் தாடி பாலாஜி தளபதி 63 திரைப்படத்தில் நடித்துள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சென்னை: நடிகர் தாடி பாலாஜி தளபதி 63 திரைப்படத்தில் நடித்துள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய
 

நடிகர் தாடி பாலாஜி தளபதி 63 திரைப்படத்தில் நடித்துள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சென்னை: நடிகர் தாடி பாலாஜி தளபதி 63 திரைப்படத்தில் நடித்துள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு சென்னையில் பல இடங்களில்  விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் தாடி பாலாஜி, தளபதி 63 படத்தில் நடித்துள்ளதாகச் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தனது பகுதி முடிவுயடைந்து விட்டதாகவும், இன்னும் டப்பிங் பணி மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குயேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.