×

தளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்!

தளபதி 63 திரைப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் பூவையார் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது சென்னை: தளபதி 63 திரைப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் பூவையார் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் யோகி
 

தளபதி 63 திரைப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் பூவையார் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது

சென்னை: தளபதி 63 திரைப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் பூவையார் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு,விவேக்,ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகச் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் இந்தப்படத்துக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் பூவையார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதில் அவர் ஒரு பாடல் பாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.