×

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு ஆப்பு அடித்த தமிழ் ராக்கர்ஸ்!  

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. சென்னை: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உலகம்
 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. 

சென்னை: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை நேற்று வெளியானது. படத்தை காண்பதற்காக அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர். படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவிடக்கூடாது என்று தயாரிப்பு குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருட்டுத்தனமாக நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிடும் இணையதளங்களுக்குத் தடை விதித்திருந்தது. 

ஆனால், நேர்கொண்ட பார்வை படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் நேற்று இரவு 8 மணிக்கே வெளியானது. முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியான நாள் அன்றே வெளியிடுவோம் என்று கூறியிருந்தது  குறிப்பிடத்தக்கது.