×

தல 60வது படத்தில் நான் நடிக்கிறேனா? பரவி வரும் வதந்திக்கு எஸ் ஜே சூர்யா பதில் 

தல 60வது படத்தில் தான் நடிப்பதாக உலா வரும் வதந்தி உண்மையில்லை என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார். சென்னை: தல 60வது படத்தில் தான் நடிப்பதாக உலா வரும் வதந்தி உண்மையில்லை என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ, வில்லன் என்று தனக்குக் கொடுத்த அனைத்து வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து
 

தல 60வது படத்தில் தான் நடிப்பதாக உலா வரும் வதந்தி  உண்மையில்லை என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: தல 60வது படத்தில் தான் நடிப்பதாக உலா வரும் வதந்தி உண்மையில்லை என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ, வில்லன் என்று தனக்குக் கொடுத்த அனைத்து வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக தல அஜித் நடிக்கும் 60வது படத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வதந்திக்குக் காரணமாக அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் எஸ் ஜே சூர்யா இடையிலான சந்திப்பு சமீபத்தில் அமைந்தது.  

இந்த சந்திப்பைப் பற்றி உண்மைத் தன்மையை அறியாமல் அஜித் ரசிகர்கள் இதனைச் சமுக வலைத்தளங்களில்  தொடர்ந்து பரப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில் தற்போது பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் அஜித்தின் 60 ஆவது படத்தில் நடிக்கிறேன் என்பது முற்றிலும் பொய்யான தகவல். நான் அஜித் மீதும் போனி கபூர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள். அனைவருக்கும் நன்றி’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.