×

தல 60 படத்தில் அஜித் ரோல் என்ன தெரியுமா? 

தல 60 படத்தில் அஜித் நடிக்கவுள்ள ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தல 60 படத்தில் அஜித் நடிக்கவுள்ள ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்துத் தெளிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு பெண் நோ என்று சொன்னால் அதனின் அர்த்தம் நோ என்று அஜித் கூறிய
 

தல 60 படத்தில் அஜித் நடிக்கவுள்ள ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தல 60 படத்தில் அஜித் நடிக்கவுள்ள ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கத்தில் வெளியான  இந்த படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்துத் தெளிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதனின் அர்த்தம் நோ என்று அஜித் கூறிய வசனத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தல அஜித், வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி பார்த்துத்திருந்தோம். 

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்தின் ரோல் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின் படி தல 60 படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த மாதம் இறுதியில் படத்தின் பூஜை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள இந்த படத்தின் மீது அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளனர்.