×

தர்பார் படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்… கடுப்பான பிரபல இயக்குநர்!

மீண்டும் ரஜினி போலீஸாக நடித்துள்ள இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினி போலீஸாக நடித்துள்ள இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில்
 

மீண்டும் ரஜினி போலீஸாக  நடித்துள்ள இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  கடந்த 9 ஆம் தேதி  உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினி போலீஸாக  நடித்துள்ள இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தர்பார் திரைப்படம்  குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாக இயக்குநர்  சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தர்பார்  குறித்து சில பேர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகதாஸ்- ரஜினி சார் சேர்ந்து இந்த பொங்கல் திருவிழாவிற்குச் சிறப்பான பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தந்துள்ளனர்.

பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி சாரின் எனர்ஜி-ஐ பார்த்துவிட்டேன். நான் தந்த டிக்கெட் பணத்திற்கு முதல் பாதி பார்த்தவுடன் முழு திருப்தி அடைந்து விட்டேன் யோகி பாபு ரஜினி சாருடன் இணைந்து கொண்டாட்டமான படத்தை தந்துள்ளார். ரஜினி சார் மகள் நிவேதா தாமஸ் எதார்த்தமான நடிப்பு, ஏமோஷனல் சீன் சூப்பர் நடிப்பு.  அனைவரும் குடும்பத்தினருடன் தியேட்டர் சென்று பாருங்கள். மிகவும் சுவாரசியமான திரைப்படத்தை  தர்பார் குழுவினர் தந்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.