×

தர்பார் பட நஷ்டம்! ஏ.ஆர்.முருகதாஸிற்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டிய விநியோகிஸ்தர்கள்

தர்பார் படத்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று எண்ணி படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்காததால் ஏமாந்து போயினர். இதனால் விரக்தியடைந்த விநியோகிஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் ரஜினிகாந்த் அவர்களை இதுவரையில் சந்திக்கவில்லை ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தர்பார் படத்தின் ஒரு வார வசூல் 150 கோடி என அதிகாரபூர்வமாக அறிவித்தது. தர்பார் படத்தால் அதிக
 

தர்பார் படத்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று எண்ணி படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்காததால் ஏமாந்து போயினர். இதனால் விரக்தியடைந்த விநியோகிஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் ரஜினிகாந்த் அவர்களை இதுவரையில் சந்திக்கவில்லை

ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தர்பார் படத்தின் ஒரு வார வசூல் 150 கோடி என அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தர்பார் படத்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று எண்ணி படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்காததால் ஏமாந்து போயினர். இதனால் விரக்தியடைந்த விநியோகிஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் ரஜினிகாந்த் அவர்களை இதுவரையில் சந்திக்கவில்லை. ரஜினி எங்களை சந்திக்காவிட்டால் போயஸ்கார்டன் வீட்டின் முன்பு உண்ணவிரதம் இருப்போம் எனவும் அறிவித்தனர். இதையடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்க சென்ற விநியோகிஸ்தர்கள் போலீசாரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், “திரைப்படத்தில் பல கோடி நஷ்டம் அடைந்து தார்மீக அடைப்படையில் அலுவலகம் வந்த விநியோகிஸ்தர்களை காவல்துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே மன்னிப்புக்கேள்” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர்.