×

தர்பார் இசை வெளியீட்டு விழாவை புறக்கணித்த நயன்தாரா!

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து தர்பார் படத்தின் முதல் சிங்கிள்
 

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. 

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. 

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கஜினி படத்திலேயே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே தர்பார் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே ஷூட்டிங்க்கு தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ள மாட்டேன் என நயன்தாரா கண்டிஷன் போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் சம்பள பாக்கி இருப்பதாகக் கூறி தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்புக்கே நயன்தாரா வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.