தருதல கதறுனா கேட்குமா ..கேட்குமா! போனா போகட்டும் பிச்ச உசுரு தானே.. கலங்கவைக்கும் மாஸ்டர் பாடல்
பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று தருதல கதறுனா கேட்குமா ..கேட்குமா என தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதிய பாடல் வரிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இப்பாடலை சிறுவன் சிபி வினீத் பாடியுள்ளார். சோகப்பாடல் போன்று வரும் இந்த பாடலை கேட்கும்பொதே கண் கலங்க வைக்கிறது.
இப்பாடல் வரிகள்….
தருதல கதறுனா கேட்குமா ..கேட்குமா
தருதல கதறுனா கேட்குமா ..கேட்குமா
இருட்டு அறையில.. அட உண்ம மறவில
நான் சிறக விரிக்கத்தான்.. கொஞ்சம் ஆச வளத்துட்டேன்..
வெளிச்சம் தெரிஞ்சது.. நீல வானம் விரிஞ்சுது..
ஆனா பறக்க முடியல.. அடி நகர முடியல…
பச்ச மண்ணு புள்ள ரெண்டு.. மூச்சு நின்னு போயாச்சு
இங்க தங்குறதும்.. தூங்குறதும் ரெண்டு ஒண்ணு ஆயாச்சு
கண்ணு ரெண்டும் களங்குதா நீயே தொடச்சுக்கோ..
இங்க.. அப்ப ஆத்தா யாரும் இல்லை தனியா தவிச்சுக்கோ..
போனா போகட்டும் பிச்ச உசுரு தானே..
திருந்த முடியாத தருதலதான் நாமே..
போனா போகட்டும் பிச்ச உசுரு தானே..
திருந்த ஆசைவுள்ள தருதலதான் நாமே..
தருதல கதறுனா கேட்குமா கேட்குமா..
தருதல கதறுனா கேட்குமா கேட்குமா.