×

தமிழ்ப்பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா : நகைச்சுவை நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம்!

விஜய்- சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பேராதரவைப் பெற்றார். நகைச்சுவை நடிகர் சார்லி ‘பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் படித்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். விஜய்- சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பேராதரவைப் பெற்றார். தஞ்சை பல்கலைக் கழகத்தின் 12 ஆவது
 

விஜய்- சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பேராதரவைப் பெற்றார். 

நகைச்சுவை நடிகர் சார்லி ‘பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் படித்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். விஜய்- சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பேராதரவைப் பெற்றார். 

தஞ்சை பல்கலைக் கழகத்தின் 12 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்த் துறை அமைச்சர் பாண்டிய ராஜன், பல்கலைக் கழக துணை வேந்தர், பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நகைச்சுவை நடிகர் சார்லி உள்ளிட்ட 150 பேருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். நடிகர் சார்லிக்கு ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’  என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டதாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து, முனைவர் பட்ட மாணவர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், கல்வியியல் நிறைஞர் மாணவர்கள், முதுநிலைப் பட்ட மாணவர்கள், இளங்கலை கல்வியியல் மாணவர்கள் என 10,346 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில் பேசிய நடிகர் சார்லி ‘ இந்த டாக்டர் பட்டம் வாங்கியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது அப்பா- அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களைப் போற்றும் விதமாக, எனக்கு முதல் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த பட்டத்தை நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.