×

தமிழ் பொண்ணுங்களுக்காக பிரசாரம் செய்யும் பிக் பாஸ் ஆர்த்தி!

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக ஒரு தமிழ்ப்பொண்ணு தான் வரவேண்டும் என்று கூறுவதன் மூலம் ஐஸ்வர்யாவை ஓரங்கட்டச் சொல்லி பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை: பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக ஒரு தமிழ்ப்பொண்ணு தான் வரவேண்டும் என்று கூறுவதன் மூலம் ஐஸ்வர்யாவை ஓரங்கட்டச் சொல்லி பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி
 

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக ஒரு தமிழ்ப்பொண்ணு தான் வரவேண்டும் என்று கூறுவதன் மூலம் ஐஸ்வர்யாவை ஓரங்கட்டச் சொல்லி பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக ஒரு தமிழ்ப்பொண்ணு தான் வரவேண்டும் என்று கூறுவதன் மூலம் ஐஸ்வர்யாவை ஓரங்கட்டச் சொல்லி பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தில் உள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன், 105 நாட்கள் ஒளிபரப்பாகிறது. இதன் இறுதிப்போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தற்போது இறுதி போட்டியாளராக ரித்விகா, ஜனனி, விஜயலக்ஷ்மி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இதில் பிக் பாஸின் அன்பு மற்றும் கருணையால் இறுதி வாரம் வரை முன்னேறியிருக்கும் ஐஸ்வர்யா, பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராகும் அளவிற்கு அவரது ஆர்மியினர் களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் போட்டியை நம்ம தமிழ் பொண்ணுங்க யாராதும் தான் வெல்ல வேண்டும் என்பதை பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரும், நடிகையுமான ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், நம் தமிழ் பெண்கள் யாரிடமும், எதற்காகவும் தோற்கக்கூடாது.. இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளராக கொண்டாடுவோம்! என ட்வீட்டியுள்ளார்.

இதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு வாக்காளிக்காதீர்கள் என பிரசாரம் செய்துள்ளார் நடிகை ஆர்த்தி. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆர்த்தி, ஐஸ்வர்யாவை பிக் பாஸ் வீட்டின் மருமகளே என்று கூறி கலாய்த்தார்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு ஆர்த்தி தனது பாணியில் சில விருதுகளை வழங்கியுள்ளார். ’மக்கள் விருது’-மும்தாஜ், ’அப்பாவி விருது’ – சென்ராயன், ’பிக் பாஸ் டைட்டில் வின்னர்’-ரித்விகா/விஜயலக்ஷ்மி/ஜனனி, ’போலி விருது’- ஐஸ்வர்யாவுக்கு என்று ட்வீட்டியுள்ளார்.

ஆர்த்தி கூறுவது போல் பிக் பாஸ் டைட்டிலை தமிழ் பெண்கள் தட்டிச் செல்வார்களா அல்லது பிக் பாஸிடம் செல்வாக்கு கொண்டுள்ள வங்காள பொண்ணு ஐஸ்வர்யா வெற்றிபெறுவாரா என்பது வரும் வெள்ளிக்கிழமை இறுதிப்போட்டியில் தெரிய வரும்.