×

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் மகேந்திரன்.அதைத்தொடர்ந்து உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார். தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பல திறமையான நடிகர்களை
 

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் மகேந்திரன்.அதைத்தொடர்ந்து உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார்.

தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன், இன்று அவரே பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார்.

பின்னர் விஜயின் தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன், தொடர்ந்து நிமிர், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் நடிகராகவும் மக்கள் மனதை வென்றுள்ளார்.

79 வயதாகும் மகேந்திரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதை அவரின் மகன்  ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரின்  உடலுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்