×

தமிழில் வெளியாகிறது தனுஷின் சர்வதேச ஹிட் திரைப்படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பக்கிரி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பக்கிரி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான ‘The Extraordinary Journey Of The Fakir’ திரைப்படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிலையில்
 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பக்கிரி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பக்கிரி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான ‘The Extraordinary Journey Of The Fakir’ திரைப்படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. 

இந்த நிலையில் தமிழில் இந்த படத்தை ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியிட முடிவு செய்தனர். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை. படம் தமிழில் வெளியாகவில்லை. இந்நிலையில், ஒய் நாட் எக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியிடுகிறது. தற்போது இப்படம் வரும் ஜூன் மாதம்  21-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய தனுஷ், ‘தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும். இதை எனது ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.