×

தனுஷ் – வெற்றிமாறன் வெளியிடும் அச்சமில்லை அச்சமில்லை டீசர் 2

மண்ணு செத்தா விவசாயி செத்ருவான், விவசாயி செத்தா இந்த நாடே செத்துரும்னு அமீர் பேசிய வசனம் கவன ஈர்ப்பை பெற்றது. முத்து கோபால் இயக்கத்தில் அமீர், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அச்சமில்லை அச்சமில்லை. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இயக்குனர் அமீரிடம் உதவியாளராக இருந்த முத்துகோபால் இயக்கியுள்ள முதல் படம் .இது,விவசாயிகள் பிரச்னை பற்றியும், கார்பரேட் சுரண்டல் பற்றியும் நய்யாண்டியாகவும்,நறுக்கென்ற வசனங்களாலும் செம சட்டையராக எடுக்கப்பட்டுள்ள படம் .அடித்தட்டு மக்களின்
 

மண்ணு செத்தா விவசாயி செத்ருவான், விவசாயி செத்தா இந்த நாடே செத்துரும்னு அமீர் பேசிய வசனம் கவன ஈர்ப்பை பெற்றது.

முத்து கோபால் இயக்கத்தில் அமீர், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அச்சமில்லை அச்சமில்லை. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இயக்குனர் அமீரிடம் உதவியாளராக இருந்த முத்துகோபால் இயக்கியுள்ள முதல் படம் .இது,விவசாயிகள் பிரச்னை பற்றியும், கார்பரேட் சுரண்டல் பற்றியும் நய்யாண்டியாகவும்,நறுக்கென்ற வசனங்களாலும் செம சட்டையராக எடுக்கப்பட்டுள்ள படம் .அடித்தட்டு மக்களின் இன்றைய வாழ்வியல் சூழலை நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர்.  

இந்தப் படத்தின் முதல் டீசரில், ‘மண்ணு செத்தா விவசாயி செத்ருவான், விவசாயி செத்தா இந்த நாடே செத்துரும்’னு அமீர் பேசிய வசனம் கவன ஈர்ப்பை பெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாவது டீசரை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர். இந்த படத்தை அமீர் தனது டீம் ஒர்க் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

இதையும் வாசிக்க: இரட்டை கொலை வழக்கில் பக்கத்துக்கு வீட்டு இளைஞர் கைது: விபரீத ஆசையால் நடந்த கொடூரம்!