×

தனுஷ் – சன் பிக்சர்ஸ் கூட்டணியின் இயக்குநர் இவர் தானாம்?! அப்போ காமெடிக்கு பஞ்சமில்லை!

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமாக நடந்து வருகிறது. நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 படத்தில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார்.
 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது   திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமாக நடந்து வருகிறது.

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் D40 படத்தில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து இயக்குநர்  மாரி  செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில்   நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரித்து வருகிறார்.

 

 

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்பட பலரும் இதில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது   திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமாக நடந்து வருகிறது.

 

இதனிடையே  நடிகர் தனுஷின்  44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தின் இயக்குநர்  யார் என்பது குறித்த மற்ற எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தை தனுஷே இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் தனுஷ்-சன் பிக்சர்ஸ் கூட்டணி படத்தை  இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’  படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுகுறித்த எந்த ஆதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.