×

தடய மருத்துவராக நடிக்கும் அமலா பால்!

நடிகை அமலா பால் தனது அடுத்த திரைப்படத்தில் மருத்துவராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: நடிகை அமலா பால் தனது அடுத்த திரைப்படத்தில் மருத்துவராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ராட்சசன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பில் ‘ஆடை’, ‘அதோ அந்த பறவை போல’, மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதையடுத்து உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட திரில்லர் திரைப்படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார். அனூப் பணிக்கர் இயக்கவிருக்கும்
 

நடிகை அமலா பால் தனது அடுத்த திரைப்படத்தில் மருத்துவராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: நடிகை அமலா பால் தனது அடுத்த திரைப்படத்தில் மருத்துவராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ராட்சசன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பில் ‘ஆடை’, ‘அதோ அந்த பறவை போல’, மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதையடுத்து உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட திரில்லர் திரைப்படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார்.

அனூப் பணிக்கர் இயக்கவிருக்கும் இப்படத்தில் தடய மருத்துவ நிபுணராக அமலா பால் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இக்கதையில், ஒரு மர்மமான வழக்கை தனித்துவமான வழிமுறைகளை கொண்டு ஹீரோயின் எவ்வாறு கையாளுகிறார் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஜே.ஃபிலிம்ஸ் மற்றும் ஒயிட் ஸ்க்ரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. சென்னை மற்றும் கோவையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.