×

தங்க நிற ஆடையில் பிரமிக்க வைக்கும் அழகுடன் வலம் வந்த ஐஸ்வர்யா ராய்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராய் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார. பிரான்ஸ்: நடிகை ஐஸ்வர்யா ராய் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார. 72-வது சர்வதேச திரைப்பட விழாவான ‘கேன்ஸ் திரைப்பட விழா’, மே 14-ம் தேதி பிரான்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், உலகமெங்கிலுமிருந்து பல்வேறு விதமான திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவை திரையிடப்பட்டன.
 

நடிகை ஐஸ்வர்யா ராய் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார. 

பிரான்ஸ்:  நடிகை ஐஸ்வர்யா ராய் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார. 

72-வது சர்வதேச திரைப்பட விழாவான ‘கேன்ஸ் திரைப்பட விழா’, மே 14-ம் தேதி பிரான்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.   இதில், உலகமெங்கிலுமிருந்து பல்வேறு விதமான  திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவை   திரையிடப்பட்டன. 

 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொதுவாக ஐஸ்வர்யா ராய் ஏதாவது ஒரு விழாவில் கலந்து கொள்கிறார் என்றால் அவர் எந்த மாதிரியான உடை அணிகிறார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்படும். அந்த அளவிற்கு கலைநயமுடனும், அசத்தலாகவும் அவர் வலம்  வருவார்.

அந்த வகையில் தங்க நிறத்தால் ஆன, கழுத்தில் பிஷ் கட் கொண்ட மெட்டாலிக் கவுன் அணிந்து சிவப்புக் கம்பள வரவேற்புக்கு வந்தார் ஐஸ்வர்யா ராய். அவருடன் அவரது மகள் ஆராத்யாவும் மிடுக்காகத் தோன்றினார். இவர்களை அங்கு கூடியிருந்த புகைப்பட கலைஞர்கள் பலர் தங்கள் கேமராக்களில் கிளிக் செய்தார்கள். இந்த புகைப்படங்களானது தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக இந்த விழாவில் மல்லிகா ஷெராவத், சோனம் கபூர், தீபிகா படுகோன், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பிரியங்கா சோப்ரா, டயானா பென்ட்டி மற்றும் ஹீனா கான் போன்றவர்கள் இதில் முதல்முறையாகப் பங்கேற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.