×

டோலிவுட்டில் அறிமுகமாகும் 4ஜி விளம்பர பெண்!

விளம்பரங்கள் மூலம் பிரபலமான சாஷா ஷெட்ரி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்: விளம்பரங்கள் மூலம் பிரபலமான சாஷா ஷெட்ரி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி விளம்பரங்கள் பிரபலமானது. அதில் நடித்த சாஷா ஷெட்ரியின் உடல் மொழியும், தோற்றமும் இந்தியா முழுக்க அவரைக் கவனிக்க வைத்தது. இசைக்கலைஞர், மாடல், நடிகை ஆகிய பன்முகத் திறமை பெற்ற சாஷா தெலுங்கில் ஆபரேஷன் கோல்டு பிஷ் மூலம் அறிமுகமாகிறார். நடிகர் சாய்குமாரின் மகன்
 

விளம்பரங்கள் மூலம் பிரபலமான சாஷா ஷெட்ரி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்: விளம்பரங்கள் மூலம் பிரபலமான சாஷா ஷெட்ரி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி விளம்பரங்கள் பிரபலமானது. அதில் நடித்த சாஷா ஷெட்ரியின் உடல் மொழியும், தோற்றமும் இந்தியா முழுக்க அவரைக் கவனிக்க வைத்தது. இசைக்கலைஞர், மாடல், நடிகை ஆகிய பன்முகத் திறமை பெற்ற சாஷா தெலுங்கில் ஆபரேஷன் கோல்டு பிஷ் மூலம் அறிமுகமாகிறார். நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நித்யா நரேஷ், மனோஜ் நத்தம், க்ருஷ்ணுடு ஆகியோருடன் சாஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிவி சாய்கிரண் இயக்குகிறார்.

இந்த படம் வெளியாகும் முன் பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படத்திலும் சாஷா ஒப்பந்தமாகியுள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திலும் சாஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.