×

டைட்டானிக் படத்தின் 10வருட சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்! 

‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வசூல் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை: ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வசூல் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் நான்காம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப்
 

‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வசூல்  டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வசூல்  டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் நான்காம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் சமீபத்தில்  வெளியானது. பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. என்ன தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் திருட்டுத்தனமாக வெளியானாலும், படத்தின் வசூலுக்கு மட்டும் பஞ்சமில்லை.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சாதனை படைத்தது. குறிப்பாக இந்தியாவில் ஒரு நாளுக்கு பத்தலட்சத்திற்கு மேலான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் என்று பார்த்தால் 169 மில்லியன் வசூல் செய்திருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 1,186 கோடி. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருந்ததாகச் சொல்லப்பட்டது.
 
இந்த நிலையில் உலகளவில் அதிகம் வசுலித்த படங்களில் இரண்டாவது இடத்திலிருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இரண்டே வாரத்தில் முறியடித்துள்ளது. மேலும் முதல் இடத்திலுள்ள அவதார் படத்தின் வசூலையும் இப்படம் முறியடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வரை வசூல் செய்துள்ள இப்படம், ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 2500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.