×

டிவிட்டர் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘தளபதி 64 ஃபஸ்ட்லுக்’

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு
 

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் .

இப்படத்தின் இரண்டு கட்ட  படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம்  கட்டப்படப்பிடிப்பு கர்நாடகா ஹிமோகாவில் பெரிய சிறைச்சாலை போன்று செட் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், தளபதி 64 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று  அறிவித்து விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். 

இந்நிலையில்  #Thalapathy64FLday என்ற ஹேஸ்டேக் இணையத்தில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. மாநகரம், கைதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த  லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி 64 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது எனலாம்.