×

டிவிட்டரில் டிரெண்டாகும் #திமுக_தலைவர்_விஜய்…இணையத்தை கலக்கும் நெட்டிசன்ஸ்!

வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிகில் பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில் கடந்த இருதினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து
 

வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த  இருதினங்களுக்கு முன்பு  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால் விஜய்   ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி  அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து வருமான வரித்துறையின் சோதனை முடிந்து சில தினங்களுக்கு முன்பு   மீண்டும்  விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.  
 

அப்போது அவரை காண பெருமளவு ரசிகர்கள் கூட்டம் வந்ததால்  விஜய் அங்கிருந்த வேனின் மீது ஏறி செல்பி எடுத்து அதை தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இன்று காலை முதல் #திமுக_தலைவர்_விஜய் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

திமுகவை காப்பாற்ற, திமுக மீண்டும் ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவராக விஜய்யை நியமித்தால்  போதும்  என்றும் எப்படியோ பிரசாந்த் கிஷோர் புண்ணியத்துல, திமுக காலியானா சரி; மூடு விழா நடத்தப்போற கட்சிக்கு எந்த #தளபதி(அரசியல் தளபதி, சினிமா தளபதி) தலைமை தாங்கினா என்ன ? என்றும் கூறி வருகிறார்கள்.