×

டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ‘தர்பார்’ டும் டும் பாடல்…!

நடன அசைவுகளுடன் நயன்தாராவை பார்த்து ரொமான்ஸ் செய்ய, நயன்தாரா அழகு தேவதையாக மிளிர்கிறார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலின் புரோமோ
 

நடன அசைவுகளுடன் நயன்தாராவை பார்த்து  ரொமான்ஸ்  செய்ய, நயன்தாரா அழகு தேவதையாக மிளிர்கிறார். 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலின் புரோமோ வீடியோவை  தனது  டிவிட்டர் பக்கத்தில்  நேற்று வெளியிட்டார். இதில் ரஜினிகாந்த் செம்ம ஸ்டைலிஷான நடன அசைவுகளுடன் நயன்தாராவை பார்த்து  ரொமான்ஸ்  செய்ய, நயன்தாரா அழகு தேவதையாக மிளிர்கிறார். 

இந்த வீடியோ வெளியான சிலமணிநேரங்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை கண்டுகளித்துள்ளனர். தற்போது யூடியூபில் தர்பார் டும் டும்  பாடல் டிரெண்டிங்கில்  முதலிடத்தில் உள்ளது. 

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.