×

டபாங் 3 துவங்கியது; படப்பிடிப்பு தளத்தில் பிரபுதேவா – சல்மான் – வைரலாகும் போட்டோ

நடிகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘டபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது. நடிகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்தியில் 2015-ஆம் ஆண்டு அக்ஷய் குமார்
 

நடிகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘டபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது.

நடிகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.

இந்தியில் 2015-ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடித்த ‘சிங் இஸ் ப்ளிங்’ படமே இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியானது. அதனைத் தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் ‘டபாங் 3’ படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின. ஆனால், படப்பிடிப்பு எப்போது, யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) ‘டபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சல்மான் கான் இதனை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹா-தான் இதிலும் நடிக்கிறார். டபாங் முதல் பாகத்தை தமிழில் சிம்புவை வைத்து ‘ஒஸ்தி’ என்ற பெயரில் தரணி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

வேல்முருகன் கட்சியில் இணைந்த வீரப்பன் மனைவி மற்றும் குருவின் சகோதரி; ஆட்டம் காணும் பா.ம.க!?