×

ஜெயலலிதா பயோபிக்: தீவிர பயிற்சியில் நித்யா மேனன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயர்ன் லேடி’ திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார். ஜெயலலிதாவின் கம்பீரத்தை திரையில் கொண்டு வர நித்யா மேனன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயர்ன் லேடி’ திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார். ஜெயலலிதாவின் கம்பீரத்தை திரையில் கொண்டு வர நித்யா மேனன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகையாக ஒரு ரவுண்ட் வந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்விலும் அவருடன் பயணித்தார். எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவெடுத்து கட்சியை நிர்வகித்தார்.

தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மக்கள் பணிக்காக அர்ப்பணித்த ஜெயலலிதா, 6 முறை தமிழக முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவிற்கே உரித்தான, நடை, உடை, பாவனை, பார்வையில் இருக்கும் தெளிவு உள்ளிட்ட அம்சங்களை அவரது பழைய படங்களிலும், அரசியல் தொடர்பான வீடியோக்களையும் பார்த்து நித்யா மேனன் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.