×

ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் 28ம் தேதி வெளியாகாது! படக்குழு அதிரடி ட்வீட் 

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகாது என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். சென்னை: ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகாது என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 24வது திரைப்படம் கோமாளி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள
 

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகாது என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

சென்னை: ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகாது என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 24வது திரைப்படம் கோமாளி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளது. 

சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் 9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து ‘கோமாளி’ படம் வரும் ஜூன் 28-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியானது. இதனை பலரும் பகிரத் தொடங்கினர். இதை தற்போது படத்தின் இயக்குநர் முற்றிலும் மறுத்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் ‘கண்டிப்பாக வரும் ஜூன் 28-ம் தேதி படத்தின் வெளியீடு கிடையாது. இப்போது தான் போஸ்டர்கள் வெளியிடத் தொடங்கியுள்ளோம்’ என்று பரவி வரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.