×

ஜுவாலாவுடன் காதல்..வெளிப்படையாக அறிவித்த நடிகர் விஷ்ணு விஷால்

ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது தோழி ரஜினியை திருமணம் கொண்டார்.
 

ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்   இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். 

 

இதனிடையே இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது  தோழி ரஜினியை  திருமணம்  கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

 

இதையடுத்து விஷ்ணு விஷால்  பிரபல  பேட்மிண்டன்  வீராங்கனை  ஜூவாலா  குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை விஷ்ணு விஷால் மறுத்தார்.

இந்நிலையில்  விஷ்ணு விஷால் ஜூவாலா முத்தமிடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு  My valentine ❤️ என விஷால் குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்ஸ் வழக்கம் போல விஷ்ணு விஷாலை வசைபாடி வருகிறார்கள்.